Tuesday, June 21, 2011

கவலைப்படுகிறேன்




நான் குருடனாய் இருந்திருந்தால்கூட

கவலைப்படமாட்டேன்

ஆனால் இன்று கவலைப்படுகிறேன்

கண் இருந்தும் அவளை

காணமுடியவில்லையே என்று!!!

பார்வை!!!




அன்பே உன் வீட்டு

வெற்றுக் கொடியில்

காய்ந்து கொண்டிருக்கிறது

என் ஈரமான பார்வை!!!

Tuesday, June 14, 2011

என் கவிதைகள்.



அவள் கொலுசின் ஓசை கேட்டு பிறந்த என் கவிதைகள்....

அவள் மெட்டி ஓசையை கேட்டு இறந்து போயின!!!!!

அவள் உதடுகளால்



என் மேல் கோபம் வரும் போதெல்லாம்

அறைய வேண்டும் போலிருப்பதாக சொல்கிறாள்!!!

வாங்க தயாராக இருக்கிறேன்

அவள் உதடுகளால் அறைவதாக

இருந்தால் மட்டுமே!!!

என் முதல் கவிதை


அவள் கெஞ்சி கெஞ்சிக் கேட்டும்

சொல்ல தயங்குகிறேன்

என் முதல் கவிதை

அவள் பெயரென்று!!!!

எழுதிவிட்டன கைகள்



ஏதோ எழுதவேண்டுமென

பேனாவை எடுத்தேன்

எழுதிவிட்டன கைகள்

அவள் பெயரை!!!

திருடி


அடையாளம் தெரிந்தும்

காட்டிக் கொடுக்க முடியவில்லை

என் இதயத்தை திருடியவளை!!

தயார்.



அவளுக்காக காலம் முழுவதும்

காத்திருக்க தயார்...

மரணம் போல் ஒரு நாள் நிச்சயம்

அவள் வருவாள் என்றால்!!

என்னை கண்டதும்


அவள் கால் கொளுசுக்கும்

கற்றுக் கொடுத்துவிட்டால்

என்னை கண்டதும்

மெளனமாக இருக்க!!